Type Tamil Language in Your Computer
NHM Writer என்பதுதான் நாம் பயன்படுத்த போகும் மென்பொருள் (Software) ஆகும். NHM Writer என்ற மென்பொருள் Tamil, Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi & Telugu போன்ற 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு ( Typing )செய்ய உதவுகிறது.
Download NHM Writer:
NHM Writer மென்பொருளை ( Software ) கீழே உள்ள Link-யை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் ( Download ) செய்யலாம்.Download NHM Writer Tamil Writer Software for Windows 7 and Windows 8.
Using NHM Writer:
1. NHM Writer-யை Install செய்த பிறகு அதனை open செய்து கொள்ளவும்.NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி ( Bell) போன்றஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
2. Left Click செய்தால் கிழே உள்ளது போன்று திரை தோன்றும். மொத்தம் ஐந்து விதமான முறைகளில் மூலம் தமிழ் மொழியில் எழுதலாம்.
3. இந்த ஐந்து முறைகளில் “Tamil Phonetic Unicode” அதாவது இரண்டாவது முறையானது மிகவும் எளிதாக இருக்கும். இந்த முறையில் “Amma” என்று type செய்தால் “அம்மா” என்று பதிவாகும்.
4. Shortcut: மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 1/2/3/4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
5. செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது: NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
6. அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.
0 comments: